விழுப்புரம்:கண்டமங்கலம் அருகே பெண் தீக்குளித்து இறந்தார்.கண்டமங்கலம்
அடுத்த பெரியபாபுசமுத்திரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி.
இவரது மனைவி
ஆண்டாள்(38). அடிக்கடி ஏற்பட்ட வயிற்று வலியால் மனமுடைந்த ஆண்டாள் கடந்த
10ம் தேதி தனது உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை
பலனின்றி கடந்த 13ம் தேதி இறந்தார்.புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார்
வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.