/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு ஜூலை 14 முதல் ஆக.,6 வரை கவுன்சிலிங்பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு ஜூலை 14 முதல் ஆக.,6 வரை கவுன்சிலிங்
பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு ஜூலை 14 முதல் ஆக.,6 வரை கவுன்சிலிங்
பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு ஜூலை 14 முதல் ஆக.,6 வரை கவுன்சிலிங்
பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு ஜூலை 14 முதல் ஆக.,6 வரை கவுன்சிலிங்
காரைக்குடி : பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங், வரும் 14ம் தேதி காரைக்குடியில் துவங்குகிறதென, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாலா தெரிவித்தார்.
நேரடி 2 ம் ஆண்டு சேர்க்கைக்கு 26,000 பேர் விண்ணப்பித்தனர். ஜூலை 14 ல் காலை 9 மணிக்கு பி.எஸ்சி., மாணவர்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். ஜூலை 15 ல் காலை 8 மணிக்கு கெமிக்கல் பிரிவு, காலை 10 மணிக்கு டெக்ஸ்டைல் லெதர் பிரிண்ட்டிங் பிரிவு, பகல் 12 மணி முதல் ஜூலை 17 வரை சிவில் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். ஜூலை 17 ல் பிற்பகல் 4 மணி முதல் ஜூலை 22 வரை மெக்கானிக்கல் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். ஜூலை 22 முதல் ஆக., 6 வரை எலக்ட்ரிக் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும்.