/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஓணம் பண்டிகை மலர்களை தரிசிக்க கூட்டம்ஓணம் பண்டிகை மலர்களை தரிசிக்க கூட்டம்
ஓணம் பண்டிகை மலர்களை தரிசிக்க கூட்டம்
ஓணம் பண்டிகை மலர்களை தரிசிக்க கூட்டம்
ஓணம் பண்டிகை மலர்களை தரிசிக்க கூட்டம்
ADDED : செப் 10, 2011 01:50 AM
ஊட்டி :ஓணம் விடுமுறையால், ஊட்டியில் உள்ள சுற்றுலா மையங்களில், பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்தது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை, நீலகிரி உட்பட சில மாவட்டங்களில், நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சுற்றுலா ஸ்தலமான ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தாவரவியல் பூங்காவை, நேற்று மதியம் வரை, 3,000த்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு சென்றனர். பல ஓட்டல்களில், 'ஓண சத்யா' விருந்தோம்பல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பார்வையாளர்கள் கூட்டம், இன்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்கா மேலாளர் ராம்சுந்தர் கூறுகையில், ''ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, நாளொன்றுக்கு 6,000த்துக்கும் மேல் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், எண்ணிக்கை அதிகரிக்கும்,'' என்றார்.