Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்

ADDED : ஜூன் 24, 2025 04:13 AM


Google News
Latest Tamil News
அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக எச்சரித்துள்ளது. இதற்கான தீர்மானம் அந்த நாட்டின் பார்லிமென்டில் நிறைவேறியுள்ளது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து, ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவே முடிவு எடுக்கும்

இந்த ஜலசந்தி, ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே அமைந்துள்ளது. இது, பெர்சியன் வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கிறது. இவை, அரபிக் கடலில் கலக்கின்றன. இதனால், இந்த ஹார்முஸ் ஜலசந்தி என்பது, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளுக்கு மிகவும் முக்கியமாகும்

இந்த ஜலசந்தி என்பது மிகவும் குறுகியதாகும். அதன் மிகவும் குறுகிய பகுதி, 33 கி.மீ., அகலம் மட்டுமே உள்ளது. அதிலும், கப்பல்கள் செல்லும் பகுதி, 3 கி.மீ., துாரம் மட்டுமே உடையவை. அதனால், இந்த இடத்தில் சரக்குக் கப்பல்கள் செல்வதை ஈரானால் தடுக்க முடியும் அல்லது தாக்க முடியும்

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 1.8 கோடி பேரல் கச்சா எண்ணெய் இந்த வழியாக செல்கிறது

கடந்த 2012-ம் ஆண்டு ஈரானுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தபோது, ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்தது; ஆனால், அதை செய்யவில்லை

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினால், கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் இது பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது

இந்தியா 40 சதவீத கச்சா எண்ணெய், 50 சதவீத இயற்கை எரிவாயு ஆகியவற்றை இந்த வழியாகத்தான் பெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us