Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/"பவர் கட்' பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண லாஸ்பேட்டையில் துணை மின் நிலையம்

"பவர் கட்' பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண லாஸ்பேட்டையில் துணை மின் நிலையம்

"பவர் கட்' பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண லாஸ்பேட்டையில் துணை மின் நிலையம்

"பவர் கட்' பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண லாஸ்பேட்டையில் துணை மின் நிலையம்

ADDED : ஆக 25, 2011 02:03 AM


Google News

புதுச்சேரி : 'லாஸ்பேட்டை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை களைய, அப்பகுதியில் துணை மின்நிலையம் அமைக்கப்படும்' என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

மின்சாரம் தொடர்பாக பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள்: புதுச்சேரியின் தற்போதைய மின் தேவை 420 மெகாவாட் ஆகும். இது, 12வது ஐந்தாண்டு திட்ட முடிவில் 548 மெகாவாட் ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஏனாம் பகுதியில் கிடைக்க உள்ள இயற்கை எரிவாயுவைக் கொண்டு 350 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்காலில் உள்ள துறைமுகத்தைப் பயன்படுத்தி போலகம் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்தப்படும். லாஸ்பேட்டை பகுதியில் மின் தேவை மற்றும் அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. மின்நுகர்வோர்களுக்கு விரைவாக மின் இணைப்பு கொடுக்கும் பொருட்டு, குரும்பாப்பட்டு துணை மின் நிலையத்தில் மேலும் புதிதாக ஒரு 25 எம்விஏ மின் மாற்றி நிறுவப்படும்.

மின் தடங்கலால் வரும் புகார்களை நிவர்த்தி செய்திட, 24 மணி நேரமும் செயல்படும் கணினிமயமாக்கப்பட்ட மையம் ஒன்று அமைக்கப்படும். மின் பட்டியல் பற்றிய புகார்கள் மற்றும் தவறுகளைக் குறைக்கும் வகையில், மின் பட்டியலைக் கணக்கிட்டு வசூல் செய்ய புதிய மென் பொருள் அறிமுகப்படுத்தப்படும். நுகர்வோர் குறைதீர்க்கும் மையம், நான்கு பிராந்தியங்களுக்கும் சென்று குறைகளைக் கேட்டு, அவற்றைக் களைய ஆவன செய்யும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us