/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/திறந்த வெளியில் ஆடுகள் வெட்டுவதால் ஓசூர் நகராட்சிக்கு வருவாய் இழப்புதிறந்த வெளியில் ஆடுகள் வெட்டுவதால் ஓசூர் நகராட்சிக்கு வருவாய் இழப்பு
திறந்த வெளியில் ஆடுகள் வெட்டுவதால் ஓசூர் நகராட்சிக்கு வருவாய் இழப்பு
திறந்த வெளியில் ஆடுகள் வெட்டுவதால் ஓசூர் நகராட்சிக்கு வருவாய் இழப்பு
திறந்த வெளியில் ஆடுகள் வெட்டுவதால் ஓசூர் நகராட்சிக்கு வருவாய் இழப்பு
ஓசூர் : ஓசூர் நகராட்சி நவீன ஆடு அடிக்கும் தொட்டியில் டோக்கன் பெறாமல் இறைச்சி கடைகளில் திறந்த வெளியில் ஆடுகள் வெட்டப்படுவதால் நகராட்சிக்கு வருமானம் இழப்பு ஏற்ட்டுள்ளது.
ஆடு அடிக்கும் தொட்டியில் வெட்டப்படும் ஆடுகளை பரிசோதனை செய்வதற்கு கால்நடை மருத்துவர் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்ய வருவதில்லை. வெட்டப்படும் ஆடுகள் பரிசோதனை செய்யப்படாமல் வெட்டப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் ஆடு அடிக்கும் தொட்டி செயல்பாட்டை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதால், இறைச்சி கடைக்காரர்கள் சமீப காலமாக ஆடு அடிக்கும் தொட்டியில் ஆடுகளை வெட்டாமல் கடைகளில் திறந்த வெளியில் ஆடுகளை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
ஓசூர் நகராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இந்த இறைச்சி கடைகளில் தினசரி 300க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் விழா காலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படுகிறது. ஆனால், ஆடு அடிக்கும் தொட்டியில் பெயரளவுக்கு 20 முதல் 30 ஆடுகள் மட்டும் வெட்டப்படுகிறது. மீதி 90 சதவீதம் ஆடுகள் இறைச்சி கடைகளில் திறந்த வெளியில் வெட்டி சீல் இல்லாத இறைச்சிகளை விற்பனை செய்கின்றனர். ஒரு சில இறைச்சி கடைக்காரர்கள் இறந்த ஆடுகளையும், பல்வேறு நோய் தாக்கப்பட்ட ஆடுகளை மலிவு விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. திறந்தவெளியில் ஆடுகளை வெட்டுவதால் கடும் சுகாதார சீர்கேடும், பொதுமக்களுக்கு பல்வேறு மர்ம நோய்களும் பரவுகிறது.