/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வனத்திருப்பதி கோயிலில் புரட்டாசி சனி பூஜைவனத்திருப்பதி கோயிலில் புரட்டாசி சனி பூஜை
வனத்திருப்பதி கோயிலில் புரட்டாசி சனி பூஜை
வனத்திருப்பதி கோயிலில் புரட்டாசி சனி பூஜை
வனத்திருப்பதி கோயிலில் புரட்டாசி சனி பூஜை
ADDED : அக் 09, 2011 02:36 AM
உடன்குடி:வனத்திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஏராளமான பக்தர்கள்
குவிந்தனர்.வனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாச பெருமாள், ஆதிநாராயணர்,
சிவனணைந்த பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி
காலை 5 மணிக்கு நடைதிறப்பும், காலை 6 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், காலை
8.30 மணிக்கு திருவாராதனம் தளிகை, சாத்துமுறை கோஷ்டியும் நடந்தது. காலை 6
மணி முதல் இரவு 8 மணி வரை ஓட்டல் சரவணபவனின் பல்வேறு வகையான அன்னதானமும்
நடந்தது. பக்தர்களின் வசதிக்காக திருநெல்வேலி-கச்சனாவிளை (வனத்திருப்பதி)
மற்றும் திருச்செந்தூர் - கச்சனாவிளை மார்க்கமாக சிறப்பு ரயில்கள் தென்னக
ரயில்வே மூலம் இயக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் சிறப்பு பஸ்களும்
இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் ராஜகோபால், ஓட்டல் முதன்மை
நிர்வாகி கணபதி, சிற்பி கணேசன், கோயில் அதிகாரி வசந்தன், கமலக்கண்ணன்
மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


