/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/மீன்சுருட்டியில் நாளை சிறப்பு மனுநீதி நாள் விழாமீன்சுருட்டியில் நாளை சிறப்பு மனுநீதி நாள் விழா
மீன்சுருட்டியில் நாளை சிறப்பு மனுநீதி நாள் விழா
மீன்சுருட்டியில் நாளை சிறப்பு மனுநீதி நாள் விழா
மீன்சுருட்டியில் நாளை சிறப்பு மனுநீதி நாள் விழா
ADDED : செப் 13, 2011 12:44 AM
அரியலூர்: மீன்சுருட்டியில் நாளை 14ம் தேதி சிறப்பு மனுநீதி நாள் விழா
நடக்கிறது.
அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சங்கரவடிவேல்
வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, குண்டவெளி
பஞ்சாயத்துக்குட்பட்ட மீன்சுருட்டியில் உள்ள கட்டிடக்குழு திருமண
மண்டபத்தில், நாளை 14ம் தேதி புதன் கிழமை காலை 11 மணிக்கு நடக்கும் சிறப்பு
மனுநீதி நாள் விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் தலைமை வகிக்கிறார்.
விழாவில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட பஞ்., தலைவர், மாவட்ட பஞ்.,
கவுன்சிலர்கள், பஞ்.,யூனியன் சேர்மன், பஞ்.,யூனியன் கவுன்சிலர்கள் மற்றும்
பல்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். நிலப்பட்டா,
மனைப்பட்டா, முதியோர் உதவிதொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ள
இவ்விழாவில், பொதுமக்கள் பலரும் பங்கேற்று பயன்பெறலாம். விழா ஏற்பாடுகளை
உடையார்பாளையம் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) ஸ்ரீதரன், தாசில்தார் பொன்முடி
உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.