/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பயிற்சிசாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பயிற்சி
சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பயிற்சி
சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பயிற்சி
சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பயிற்சி
ADDED : ஜூலை 11, 2011 02:57 AM
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்கள்
மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்புகள்
குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், தர்மபுரி செந்தில் பள்ளியில்
நடந்தது.தர்மபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தலைமை
வகித்தார்.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாலமுருகன், ராஜேஷ் கண்ணா ஆகியோர்
கலந்துகொண்டனர்.உச்சநீதி மன்றம் அறிவுறுத்தலின்படி கல்வி நிறுவன வாகனங்கள்
இயக்கும் ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், வாகனங்களின்
தன்மைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்
ஓட்டுனர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள், வாகனத்தின் உரிமங்கள், வாகனம்
செல்ல வேண்டிய வேகம் ஆகியவை குறித்து போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து
பயிற்சி வழங்கினார்.