/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் இன்று இஸ்லாமிய இலக்கிய கழக மாநாடு : வைகோ பங்கேற்புதென்காசியில் இன்று இஸ்லாமிய இலக்கிய கழக மாநாடு : வைகோ பங்கேற்பு
தென்காசியில் இன்று இஸ்லாமிய இலக்கிய கழக மாநாடு : வைகோ பங்கேற்பு
தென்காசியில் இன்று இஸ்லாமிய இலக்கிய கழக மாநாடு : வைகோ பங்கேற்பு
தென்காசியில் இன்று இஸ்லாமிய இலக்கிய கழக மாநாடு : வைகோ பங்கேற்பு
ADDED : அக் 01, 2011 11:30 PM
தென்காசி : தென்காசியில் இன்று (2ம் தேதி) நடக்கும் இஸ்லாமிய இலக்கிய கழக மாநில மாநாட்டில் வைகோ பேசுகிறார்.
தென்காசி இசக்கி திருமண மண்டபத்தில் இன்று (2ம் தேதி) இஸ்லாமிய இலக்கிய கழக மூன்றாம் மாநில மாநாடு நடக்கிறது. காலையில் கருத்தரங்கம், மாலையில் கவியரங்கம் நடக்கிறது. இதன் பின்னர் விருது வழங்கும் விழா மற்றும் நிறைவு விழா நடக்கிறது. இதாயத்துல்லா தலைமை வகிக்கிறார். இஸ்லாமிய இலக்கிய கழக பொது செயலாளர் அப்துல் சமது வரவேற்கிறார்.
கவிக்கோ அப்துல்ரகுமான், சிலம்பொலி செல்லப்பனார் சிறப்புரையாற்றுகின்றனர். உமறுபுலவர் விருது, வாழ்நாள் சாதனையாளர்கள் விருது, சமுதாய சுடர் விருதுகளை ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ வழங்கி விழா பேரூரையாற்றுகிறார். நிகழ்ச்சிகளை மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் ராசாமுகம்மது தொகுத்து வழங்குகிறார். இலக்கிய கழக பொருளாளர் ஷாஜகான் நன்றி கூறுகிறார்.


