பத்திரப்பதிவு வருவாய் சென்னை முதலிடம்
பத்திரப்பதிவு வருவாய் சென்னை முதலிடம்
பத்திரப்பதிவு வருவாய் சென்னை முதலிடம்
ADDED : ஆக 29, 2011 12:48 AM
ராமநாதபுரம் : தமிழகத்தில், பத்திரப்பதிவுத் துறையில், மண்டலம் வாரியாக வருவாய் ஈட்டியதில், சென்னை முதல் இடத்திலும், மதுரை மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில், அரசுத் துறைகளில் வருவாய் ஈட்டித் தருவதில், வணிக வரித்துறை முதலிடத்திலும், போக்குவரத்துத் துறை இரண்டாம் இடத்திலும், பத்திரப்பதிவுத் துறை மூன்றாம் இடத்திலும் உள்ளன. பத்திரப்பதிவுத் துறையில் சென்னை, மதுரை உட்பட ஒன்பது மண்டலங்கள் உள்ளன.
கடந்த ஜூலை மாதம் பத்திரப்பதிவுத் துறையில், பதிவுக் கட்டணம் உள்ளிட்ட சில மாற்றங்கள் ஏற்படுத்திய பிறகு, வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு, குத்தகைப் பதிவு, பவர் பதிவு போன்றவற்றில், முந்தைய காலங்களை விட, தற்போது, அரசுக்கு 75 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
தமிழக அளவில், பத்திரப்பதிவு வருவாய் ஈட்டுவதில், ஒன்பது மண்டலங்களில் சென்னை முதல் இடத்திலும், ஈரோடு இரண்டாவது இடத்திலும், மதுரை மூன்றாவது இடத்திலும் உள்ளன.