ஐகோர்ட் கிளையில் செப். 17ல் "லோக் அதாலத்'
ஐகோர்ட் கிளையில் செப். 17ல் "லோக் அதாலத்'
ஐகோர்ட் கிளையில் செப். 17ல் "லோக் அதாலத்'
ADDED : செப் 14, 2011 01:10 AM
மதுரை:மதுரை ஐகோர்ட் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க 'மெகா லோக் அதாலத்' செப்., 17ல் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.ஐகோர்ட் கிளையில் மதுரை உட்பட 13 தென் மாவட்டங்களை சேர்ந்த செக் மோசடி மேல்முறையீடு, விபத்துக்களில் இழப்பீடு, முதல் மற்றும் இரண்டாவது அப்பீல், நில ஆர்ஜித மனுக்கள் என ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவற்றை விரைந்து விசாரித்து தீர்வு காண, லோக் அதாலத் நடத்தப்படுகிறது. நிலுவை வழக்குகள் இதில் விசாரிக்கப்படும். ஐகோர்ட் நீதிபதிகள், ஓய்வு பெற்ற 10 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பர். விருப்பமுள்ளவர்கள், தங்கள் வழக்குகளை இங்கு பட்டியலிட்டு தீர்வு காணலாம். இதற்கான ஏற்பாடுகளை ஐகோர்ட் கிளை பதிவாளர்கள் விஜயன் (நிர்வாகம்) மற்றும் சடையாண்டி (நீதி) மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.