மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
UPDATED : ஜூன் 11, 2024 12:03 PM
ADDED : ஜூன் 11, 2024 11:52 AM

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடு குறித்து, மாணவர் அமைப்பினர் தொடர்ந்த வழக்கில், தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மருத்துவ கவுன்சிலிங் நடத்த இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்தது. அப்போது பீஹார் மற்றும் ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் வந்தன. இதன் பின்னர், தேர்வு முடிவுகள் வெளியானபோது, நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில், 1500 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மே மாதம் நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மாணவர் அமைப்பினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வு இன்று (ஜூன் 11) விசாரித்தது. அப்போது, மருத்துவ கவுன்சிலிங் நடத்த இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
நோட்டீஸ்
இந்த வழக்கில், பதில் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்கு மீதான விசாரணை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.