/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மணல் கடத்தும் மாட்டு வண்டிக்கு காப்பு: லாரிகளுக்கு பச்சைக்கொடிமணல் கடத்தும் மாட்டு வண்டிக்கு காப்பு: லாரிகளுக்கு பச்சைக்கொடி
மணல் கடத்தும் மாட்டு வண்டிக்கு காப்பு: லாரிகளுக்கு பச்சைக்கொடி
மணல் கடத்தும் மாட்டு வண்டிக்கு காப்பு: லாரிகளுக்கு பச்சைக்கொடி
மணல் கடத்தும் மாட்டு வண்டிக்கு காப்பு: லாரிகளுக்கு பச்சைக்கொடி
ADDED : ஜூலை 26, 2011 11:03 PM
திருப்புவனம்:திருப்புவனம் வைகை ஆற்றில் மணல் அள்ளிச்செல்லும் மாட்டு வண்டுகளுக்கு காப்பு போடும் அதிகாரிகள், மணல் கடத்தும் லாரிகளை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.திருப்பாச்சேத்தி பகுதி வைகை ஆற்றில், பட்டா நிலங்களில் உள்ள மணல்களை கடத்தி செல்கின்றனர்.
இதை தடுக்கவேண்டிய வருவாய், கனிமவளம், பொதுப்பணி, போலீஸ் துறையினர் கண்டும் காணாமல் இருப்பதால், கடத்தல் ஜரூராக நடக்கிறது.மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் மணலை 12 ஆயிரம் ரூபாய் வரை விற்கின்றனர். கடந்த தி.மு.க., ஆட்சியில் வரம்பு மீறி மணல் அள்ளப்பட்டதால், நிலத்தடி நீர் பாதித்த கிராம மக்கள், தற்போது குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மணல் திருட்டு தடுப்பதாக கூறும் அதிகாரிகள், மாட்டு வண்டிகளை மட்டுமே பிடிக்கின்றனர். ஆனால், லாரிகளில் மணல் கடத்தி கொள்ளை லாபம் பார்ப்பவர்களுக்கு பச்சை கொடி காட்டுகின்றனர். இதனால், இரவில் துணிச்சலாக மணல் கடத்தல் நடக்கிறது.மணலை கடத்துவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க கலெக்டர் முன்வரவேண்டும்.