Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சமச்சீர் கல்வி விவகாரம்: தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

சமச்சீர் கல்வி விவகாரம்: தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

சமச்சீர் கல்வி விவகாரம்: தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

சமச்சீர் கல்வி விவகாரம்: தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

UPDATED : ஜூலை 27, 2011 02:00 AMADDED : ஜூலை 26, 2011 11:41 PM


Google News
Latest Tamil News
சென்னை:சமச்சீர் கல்விக்கு வலு சேர்க்கும் வகையில், வரும் 29ம் தேதி தி.மு.க., போராட்டம் அறிவித்துள்ளது.

அன்றைய தினம் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரிகளை புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.தி.மு.க., தலைமை அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பு:தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை தடுத்து நிறுத்துவது என்ற முனைப்போடு, தனியார் பள்ளி முதலாளிகளும், தமிழக அரசும் மிகுந்த அக்கறையோடு, தமிழக மாணவர்களின் எதிர்காலம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களது ஆட்டத்தைத் தடுக்கவும், அநீதியை வென்று அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் கடமைப்பட்டுள்ள தமிழக கட்சிகளின் தலைவர்களின் ஏகோபித்த குரலோடு, தி.மு.க., வின் குரலும் இணைந்துள்ளது.இதனால், மாணவரணி, இளைஞரணி மற்றும் பல்வேறு அணிகள் சார்பில், வரும் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) சமச்சீர் கல்விக்கு வலு சேர்க்கும் வகையில், பள்ளி, கல்லூரிகளை மாணவர்கள் புறக்கணிப்பதோடு, பெற்றோர், ஆசிரியர்கள் வேலைக்குச் செல்லாமல் புறக்கணிக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.சிறிதும் வன்முறைக்கு இடமின்றி, அமைதியான முறையில், அறவழியில் சமச்சீர் கல்வி கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டம் நடைபெற வேண்டும்.இவ்வாறு தி.மு.க., அறிவித்துள்ளது.



'வெளியேறினால் நடவடிக்கை':தி.மு.க., அறிவித்துள்ள போராட்டம் குறித்து, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சமச்சீர் கல்வி விவகாரத்தில், ஆகஸ்ட் 2ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. அதற்குள், வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது சரியல்ல. 29ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்.பள்ளிக்குள் வந்த பின் வெளியேறினாலோ, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலோ, சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அன்றைக்கு பள்ளிக்கு வராத மாணவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us