விலை உயர்ந்த நடவு
ஜூலையில் கள்ளந்திரியில் நெல்லுக்கான நடவு நடப்பதைப் போன்று, காஷ்மீரில் குங்குமப்பூவுக்கான நடவு நடைபெறும்.
தகவல் சுரங்கம்
ஊருக்குப் பெருமை
தமிழக அரசு, நிலம் இல்லாத ஏழை விவசாயி களுக்கு, ஜெர்சி மாடுகளை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. காங்கேயம் காளைகள், ஓங்கோல் மாடுகளைப் போன்று, ஜெர்சி மாடுகள் ஊரால் சிறப்பு பெற்ற மாடுகளாகும். பிரிட்டனில் உள்ள 'பிரிட்டிஷ் சேனல்' பகுதியில் உள்ள தீவே 'ஜெர்சி' ஆகும். ஜெர்சி மாடுகள் இங்கு தான் கலப்பினம் செய்யப் பட்டன. எனவே ஜெர்சி மாடுகள் என பெயர் பெற்றன. இந்த வகை மாடுகள், மற்ற வகை மாடுகளை விட எடை குறைவாக உள்ளன. ஜெர்சி பசுவின் அதிகபட்ச எடை 540 கிலோவாகும். எனவே ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு இவற்றை கொண்டு செல்வது எளிதாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், கப்பல்களில் கொண்டு வரப்பட்டு ஜெர்சி பசுக்களும், காளை களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் பாலில் மற்ற பசுக்களின் பாலை விட, கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். எத்தகைய தட்பவெப்ப நிலையையும் ஏற்று வளரும் ஜெர்சி பசுக்கள் இந்திய காளைகளுடன் கலப்பினம் செய்யப்பட்டு புதிய வகைகள் தோன்றின.