Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உணவு சாப்பிட தனியிடம் இல்லை அரசு மருத்துவமனையின் அவலம்

உணவு சாப்பிட தனியிடம் இல்லை அரசு மருத்துவமனையின் அவலம்

உணவு சாப்பிட தனியிடம் இல்லை அரசு மருத்துவமனையின் அவலம்

உணவு சாப்பிட தனியிடம் இல்லை அரசு மருத்துவமனையின் அவலம்

ADDED : ஜூலை 24, 2011 02:25 AM


Google News

திருப்பூர் : அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பார்க்க வருவோர், உணவு உண்ண தனியிடம் இல்லாமல், நடைபாதையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்படுகிறது; பிரசவ வார்டில் தினமும் 50க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுகின்றனர்.

20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் பிறக்கின்றன. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, தினமும் 400க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனைக்கு வந்து செல்கின்றனர்; மருத்துவமனையில் உணவு விடுதி வசதி இல்லை. தங்கியுள்ள நோயாளிகளுக்கு மட்டும் உணவு வழங்க மருத்துவமனை நிர்வாகத்தின் கேன்டீன் செயல்படுகிறது;



காலை , மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. நோயாளியை பார்க்க வரும் உறவினர்கள், அவர்களே உணவு கொண்டு வந்து சாப்பிட வேண்டும். மருத்துவமனையில் தயாராகும் உணவு அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. நோயாளியின் உறவினர் மற்றும் நண்பர்கள் வாங்கி வரும் உணவை அமர்ந்து சாப்பிட இடமில்லாமல் அவதிப்படுகின்ற னர்; நோயாளிகளின் படுக்கை மற்றும் அறை பகுதிகளில் அமர்ந்து உணவு சாப்பிட யாரையும் அனுமதிப்பது இல்லை; மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் அமைத்த அரங்கை, காத்திருப்போர் ஆக்கிரமித்து கொள்கின்றனர்; கூச்சல் நிறைந்த அப்பகுதியில் யாரும் அமர்ந்து சாப்பிடுவது இல்லை.உணவு உண்ண தனியிட வசதி இல்லாத தால், வெளிவளாகத்தில் பலரும் நடக்கும் பாதையில் அமர்ந்து, உணவு பொட்டலங்களை பிரித்து சாப்பிடும் அவலம் தொடர்கிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us