ADDED : ஆக 07, 2011 02:54 AM
மதுரை:வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, காத்திருப்போருக்கு அரசு
உதவித் தொகை வழங்குகிறது. பட்டதாரிகளுக்கு ரூ. 300, பிளஸ்2 படித்தவருக்கு
ரூ. 200, எஸ்.எஸ்.எல்.சி., படித்தோருக்கு ரூ. 150, அதற்கு கீழ் ரூ. 100
வழங்குகிறது.தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தொகையை பெற்று
வந்தனர். ஒவ்வொரு ஆண்டிலும் குறிப்பிட்ட வயதை கடப்போருக்கு உதவித் தொகை
நிறுத்தப்படும். அதேசமயம் புதிய பதிவுதாரர்கள் பலர் உதவித் தொகைக்கு தகுதி
பெறுவர். ஆனால் என்ன காரணத்தாலோ புதிய இளைஞர்கள் பலர் ஆர்வமாக
விண்ணப்பிப்பது இல்லை. இந்த வகையில் மாநில அளவில் ஒன்றரை லட்சம் பேர்தான்
தற்போது உள்ளனர்.
விண்ணப்பங்களை வழங்குவது குறித்து பதிவுதாரர்களுக்கு
அலுவலகம் தகவல் அனுப்பியும் யாரும் முன்வருவதில்லை. ஊழியர்களிடம்
கேட்டபோது,
''விலைவாசி உயர்வில் இத்தொகையை இரட்டிப்பாக்க வேண்டும். முதியோர், அகதிகள்
உதவித் தொகை அதிகரித்துவிட்டது. இதனால் இத்தொகையை பொருட்படுத்துவதில்லை,''
என்றனர்.