/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முன்விரோத தகராறில் வாலிபர் கொலை இரண்டு பேருக்கு போலீஸ் வலைமுன்விரோத தகராறில் வாலிபர் கொலை இரண்டு பேருக்கு போலீஸ் வலை
முன்விரோத தகராறில் வாலிபர் கொலை இரண்டு பேருக்கு போலீஸ் வலை
முன்விரோத தகராறில் வாலிபர் கொலை இரண்டு பேருக்கு போலீஸ் வலை
முன்விரோத தகராறில் வாலிபர் கொலை இரண்டு பேருக்கு போலீஸ் வலை
ADDED : செப் 28, 2011 01:00 AM
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடியில் முன்விரோத தகராறில் வாலிபரை அடித்துக் கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் நச்சு சங்கர் (எ) சங்கர், 30.
இவர் நேற்று காலை அண்ணாநகர் அருகே வீரன் கோவில் திடலில் முகத்தில் படுகாயங்களுடனும், மார்பு மற்றும் கழுத்தில் உடைந்த பாட்டிலால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார்.தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., பகலவன் விசாரணை நடத்தினார்.மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள்சேகரித்தனர்.இது குறித்து நச்சு சங்கரின் தாய் திரிபுரசுந்தரி கொடுத்த புகாரில், கடந்த 2009 ஆண்டு அக்டோபர் மாதம் சி.டி., கடையில் மாமூல் வாங்குவது தொடர்பாக ரஜினி, வீரமணிக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக அதே மாதம் வேலைக்குச் சென்ற என் மகன் நச்சு சங்கர் மற்றும் ரஜினியை தியாகு, வீரமணி, வெங்கடேசன் ஆகியோர் வழி மறித்துத் தாக்கினர்.இதில் என் மகன் நச்சு சங்கர், ரஜினியும்சேர்ந்து தியாகுவை கத்தியால் குத்தினர். இது தொடர்பாக என் மகன் நச்சு சங்கர், தியாகு இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று மாலை என் மகனை தியாகு மற்றும் அவரது நண்பர் சங்கர் இருவரும்மோட்டார் பைக்கில் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு என் மகன் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே என் மகன் நச்சுசங்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.அவரது புகாரின் அடிப்படையில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து சந்தேகத்தின் பேரில் தியாகு, சங்கர் இருவரையும் தேடி வருகின்றனர்.