போதை பொருள் விற்பனை : நடிகை ராகுல் ப்ரீத்சிங் சகோதார் கைது
போதை பொருள் விற்பனை : நடிகை ராகுல் ப்ரீத்சிங் சகோதார் கைது
போதை பொருள் விற்பனை : நடிகை ராகுல் ப்ரீத்சிங் சகோதார் கைது
UPDATED : ஜூலை 15, 2024 06:36 PM
ADDED : ஜூலை 15, 2024 06:29 PM

ஐதராபாத்: தெலுங்கானாவில் போதை பொருள் விற்பனை செய்ததாக பாலிவுட் நடிகை ராகுல் ப்ரீத்சிங் சகோதரர் அமான்ப்ரீத்சிங் உள்ளிட்ட 5 பேரை தெலுங்கானா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.
‛கோகைன்‛ எனப்படும் போதை பொருள் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்படுவதாக தெலுங்கானா போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து ராஜேந்திரா நகர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 5 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் கைதான ஐந்து நபர்களில் ஒருவர் அமான்ப்ரீத்சிங் என்பதும் இவர் பாலிவுட் நடிகை ராகுல்ப்ரீத்சிங் சகோதரர் என்பதும் தெரியவந்தது.
இவரிடமிருந்து 2.6 கி.கி. கோகைன் போதை பொருளை பறிமுதல் செய்து இவருடன் இருந்த மேலும் நான்கு பேரையும் கைது செய்து போதை பொருள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். தவிர அமான்ப்ரீ்சிங்கிடம் இருந்து கோகைன் போதை பொருளை வாங்க வந்த 30 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.