/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆடி பிறந்தும் ஜவுளி விற்பனை படு மந்தம்ஆடி பிறந்தும் ஜவுளி விற்பனை படு மந்தம்
ஆடி பிறந்தும் ஜவுளி விற்பனை படு மந்தம்
ஆடி பிறந்தும் ஜவுளி விற்பனை படு மந்தம்
ஆடி பிறந்தும் ஜவுளி விற்பனை படு மந்தம்
ADDED : ஜூலை 21, 2011 01:06 AM
ஈரோடு: 'சென்வாட்' வரி உயர்வு, சாயக்கழிவு பிரச்னை, வெளிமாநில வியாபாரிகள் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், ஆடி மாதம் துவங்கிய பிறகும், ஜவுளி விற்பனை சூடுபிடிக்கவில்லை.தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஐந்து சதவீதம் சென் வாட் வரி, சாயப்பட்டரை பிரச்னை, மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணத்தால், உற்பத்தி குறைந்துள்ளது.
அதேபோல், நூல் விலை குறைந்தும் விலை குறையாமல் இருப்பதால், விற்பனை மந்தமாகவே உள்ளது.அதேபோல், ஆந்திராவில் தெலுங்கானா பிரச்னை வலுப்பெற்று வருவதால் நேற்றைய ஜவுளி சந்தைக்கு ஆந்திர வியாபாரிகள் ஒருவர் கூட வரவில்லை. தவிர, வாட் வரி உயர்வால் கர்நாடகா, கேரளா உள்பட வெளி மாநில வியாபாரிகளும் வருகை குறைந்துள்ளது.தற்போது, ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழக சில்லரை வியாபாரிகள் மட்டுமே நேற்றைய சந்தைக்கு ஜவுளி கொள்முதல் செய்ய குவிந்தனர். இம்மாதத்தில் ஜவுளி விற்பனை அமோகமாக இருக்கும் என்று எண்ணிய வியாபாரிகள் மத்தியில், ஜவுளித் துறையில் பல்வேறு பிரச்னைகள் அடுத்தடுத்து வருவதால் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.ஈரோவு தினசரி வியாபாரிகள் சங்கம் செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:தமிழகத்தில் புதிதாக பருத்தி துணிகள் சார்ந்த ஜவுளி ரகம் மீது ஐந்து சதவீதம் சென்வாட் வரி மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட வரியை விட, கூடுதலாக 15 சதவீதம் அதிகரித்துள்ளது.ஆடிமாதம் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால், ஆடி பண்டிகை துவங்கியும் ஜவுளி விற்பனை மந்தமாகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


