கொலீஜியம் உறுப்பினராகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா
கொலீஜியம் உறுப்பினராகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா
கொலீஜியம் உறுப்பினராகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா
ADDED : மே 26, 2025 12:12 AM

புதுடில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த அபய் எஸ்.ஓகா சமீபத்தில் ஓய்வுபெற்றார். இதனால், உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பும் கொலீஜியம் அமைப்பிலும் நீதிபதி ஓகா இடம் பெற்றிருந்தார்.
இவர் ஓய்வுபெற்றதை அடுத்து, கொலீஜியம் அமைப்பின் உறுப்பினராக, உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாவது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி நாகரத்னா நியமிக்கப்படுகிறார்.
இதையடுத்து, கொலீஜியத்தில் தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், மகேஸ்வரி மற்றும் நாகரத்னா ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் முக்கிய நியமனங்களை மேற்கொள்வதற்கும், தலைமை நீதிபதி கவாய் இன்று தனது முதல் கொலீஜியம் கூட்டத்தை கூட்டுகிறார்.