ADDED : ஆக 12, 2011 10:55 PM
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த அஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (24).
பெங்களூருவில் கடந்த இரு ஆண்டாக கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு நீண்ட
நாட்களாக வயிற்று வலி இருந்தது. கடந்த 10ம் தேதி வினோத் பெங்களூருவில்
இருந்து அஞ்சூருக்கு வந்தார். அஞ்சூர் வந்ததில் இருந்து கடுமையான
வயிற்றுவலி இருப்பதாக பெற்றோர்களிடத்தில் கூறி வந்த வினோத் நேற்று
முன்தினம் மாலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கந்திகுப்பம் எஸ்.ஐ., வெங்கடசாமி விசாரிக்கிறார்.


