ADDED : ஆக 18, 2011 02:22 PM
இந்தூர்: ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரேவுக்கு பா.ஜ., முழு ஆதரவு அளிக்கும் என பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
இந்தூரில் நிருபர்களிடம் பேசிய அவர், ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தில் பா.ஜ., முன்னணியில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு பக்கபலமாக பா.ஜ., இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.