/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மாணவர்களுக்கு இலவசநோட்டு புத்தகம் வழங்கல்மாணவர்களுக்கு இலவசநோட்டு புத்தகம் வழங்கல்
மாணவர்களுக்கு இலவசநோட்டு புத்தகம் வழங்கல்
மாணவர்களுக்கு இலவசநோட்டு புத்தகம் வழங்கல்
மாணவர்களுக்கு இலவசநோட்டு புத்தகம் வழங்கல்
ADDED : ஜூலை 11, 2011 02:50 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே மீனவர் சங்கம் சார்பில், துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலசவ நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பாலக்கோடு அடுத்த கொம்மநாயக்கனஅள்ளி பஞ்சாயத்து அரசு துவக்கப்பள்ளியில்
பாறையூர் மீனவர் தொழிலாளர் நல சங்கம் சார்பில் நடந்த இலவச நோட்டுப்
புத்தகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மீனவர் அணி ஒன்றிய செயலாளர்
முத்துராஜ் தலைமை வகித்தார். 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு
நோட்டுப் புத்தகம் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மன்றத்
தலைவர் முருகன், செயலாளர் மாது, பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, ஆசிரியர்கள்
மங்கம்மாள், அரியண்ணன் மற்றும் மதுகவுண்டர், சிவலிங்கம், ராஜா, முருகேசன்
உட்பட பலர் கலந்துகொண்டனர்.