/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆஞ்ஜநேயர் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம்ஆஞ்ஜநேயர் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம்
ஆஞ்ஜநேயர் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம்
ஆஞ்ஜநேயர் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம்
ஆஞ்ஜநேயர் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம்
ADDED : செப் 03, 2011 01:54 AM
புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் பவித்ரோத்ஸவம் நேற்று கோலாகலமாகத் துவங்கியது.புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவிலில் உள்ள பட்டாபிராமனுக்கும், பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கும், வலம்புரி மகா கணபதிக்கும் பவித்ரோத்ஸவ விழா நேற்று துவங்கியது.
இவ்விழா நேற்று முதல் வரும் 5ம் தேதி வரை நடக்கிறது. பவித்ரோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. பகவத் அனுக்ஞை யஜமான சங்கல்பம், அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி, அக்னிமதனம், கும்பஸ்தாபனம் ஆகியவை நேற்று நடந்தன.இன்று காலை 7 மணிக்கு, பூர்ணாஹூதி, சாந்திஹோமம், மகா சாந்தி ஹோமம், மாலை 5 மணிக்கு புண்யாகவாசனம் ஆகியவை நடக்கின்றன. 4ம் தேதி காலை 7 மணிக்கு திருவாராதனம், மாலை 5 மணிக்கு சாற்றுமுறை, 5ம் தேதி சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், தீர்த்தவாரி யாத்ரா தானம், கடம் ஆலய வலமாக வந்து பவித்ர மாலைகள் களைதல், விசேஷ திருவாராதனம், சாற்றுமுறை ஆகியவை நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை நிர்வாக பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட், அறங்காவலர் கோதண்டராமன் மற்றும் அறங்காவலர்கள், ஆகியோர் செய்தனர்.