Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

ADDED : செப் 03, 2011 12:32 AM


Google News

அரியலூர்: கீழப்பழுவூர் அருகே இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து அரியலூர் ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே, கருப்பிலாக்கட்டளை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர மூப்பனார் மகள் கலையரசி(24) என்ற பெண்ணுக்கும், ஆலந்துறையார் கட்டளை கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவருக்கும், கடந்த நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இளம் பெண் கலையரசி நேற்று அதிகாலை, ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கி இறந்தார். தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கலையரசியின் அப்பா ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் போலீஸார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்துள்ளனர். வரதட்சணைக் கொடுமை காரணமாக கலையரசி இறந்தாரா? என அரியலூர் ஆர்.டி.ஓ., ஸ்ரீதரன் விசாரிக்கிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us