தானே குண்டு வெடிப்பு சம்பவம்: 2 பேருக்கு பத்தாண்டு கடுங்காவல்
தானே குண்டு வெடிப்பு சம்பவம்: 2 பேருக்கு பத்தாண்டு கடுங்காவல்
தானே குண்டு வெடிப்பு சம்பவம்: 2 பேருக்கு பத்தாண்டு கடுங்காவல்
ADDED : செப் 01, 2011 01:57 AM
மும்பை : மும்பை மற்றும் தனேயில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக, இரண்டு பேருக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2008, ஜூன் 4ம் தேதி நவிமும்பை மற்றும் தனே பகுதிகளில் குண்டுகள் வெடித்தன. ஜோதா அக்பர் திரைப்படத்தை எதிர்த்து, அந்த படம் வெளியான தியேட்டர் முன்பும், மராத்தி
நாடகத்தை எதிர்த்தும், 'சனாதன் சன்ஸ்தா' என்ற இந்து அமைப்பு இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்தியது. இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேர் மீது போதுமான ஆதாரங்கள் இல்லாததால், கோர்ட் இவர்களை விடுவித்துள்ளது. அனுமந்த் கட்காரி, விக்ரம் வினய் பாவே ஆகிய இருவருக்கும், 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா, 9,500 ரூபாய் அபராதமும் விதித்து மும்பை கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.