/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து பாளை.,யில் உண்ணாவிரதம்அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து பாளை.,யில் உண்ணாவிரதம்
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து பாளை.,யில் உண்ணாவிரதம்
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து பாளை.,யில் உண்ணாவிரதம்
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து பாளை.,யில் உண்ணாவிரதம்
ADDED : ஆக 28, 2011 01:12 AM
திருநெல்வேலி : நெல்லை மாவட்ட மக்கள் விழிப்புணர்வு குழுவினர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து பாளை.,ஜவகர் மைதானத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேவிற்கு ஆதரவு தெரிவித்து நெல்லை மாவட்ட ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு குழு சார்பில் பாளை., ஜவகர் மைதானத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
உண்ணாவிரதத்தை நரம்பியல் டாக்டர் சுப்பையா துவக்கி வைத்தார். மக்கள் விழிப்புணர்வு குழு தலைவர் வேல் முருகன், உறுப்பினர் ராஜவேல் முன்னிலை வகித்தனர்.
இதில் உறுப்பினர்கள் பகவதி, கணேசன், பால்பாண்டி, லட்சுமணன், கோமு, சுந்தரம், முத்து, சேக் முகம்மது, இந்தியன் ஆட்டோ ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தை தொழில் அதிபர் ராஜமுத்துராமலிங்கம் நிறைவு செய்து வைத்தார்.


