ஆஸ்பத்திரியில் அனுமதித்த கர்ப்பிணி பலி : உடலை வாங்க மறுத்து போராட்டம்
ஆஸ்பத்திரியில் அனுமதித்த கர்ப்பிணி பலி : உடலை வாங்க மறுத்து போராட்டம்
ஆஸ்பத்திரியில் அனுமதித்த கர்ப்பிணி பலி : உடலை வாங்க மறுத்து போராட்டம்
ADDED : செப் 27, 2011 11:30 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த கர்ப்பிணி இறந்ததால், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைபேட்டையை சேர்ந்தவர் மரியவில்லி பவுலினாள், 35. கர்ப்பிணியான இவர், நான்காவது பிரசவத்திற்காக செப்., 24ல் ஸ்ரீவி., அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பணியிலிருந்து வீட்டிற்கு சென்றுவிட்ட டாக்டரை அழைத்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உறவினர்கள்,' முறையான சிகிச்சை அளிக்க தவறிய டாக்டர் மீராவை கைது செய்யவும், உடலை ஸ்ரீவி., டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தி ஆஸ்பத்திரிகையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களிடம், சிவகாசி ஆர்.டி.ஓ., முனியசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். டாக்டர் மீரா மீது வழக்கு பதியவும், ஸ்ரீவி., ஆஸ்பத்திரியிலேயே பிரேத பரிசோதனை செய்யவும், உறுதி கூறியதால், போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து நடந்த பிரேத பரிசோதனைக்குபின், உடலை வாங்கி சென்றனர்.


