/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/3,577 உள்ளாட்சி பதவிகளுக்கு 3,128 வேட்பாளர் மனு தாக்கல்3,577 உள்ளாட்சி பதவிகளுக்கு 3,128 வேட்பாளர் மனு தாக்கல்
3,577 உள்ளாட்சி பதவிகளுக்கு 3,128 வேட்பாளர் மனு தாக்கல்
3,577 உள்ளாட்சி பதவிகளுக்கு 3,128 வேட்பாளர் மனு தாக்கல்
3,577 உள்ளாட்சி பதவிகளுக்கு 3,128 வேட்பாளர் மனு தாக்கல்
ADDED : செப் 27, 2011 12:30 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேர்மன், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட, 3,577 உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று வரை, 3,128 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 22ம் தேதி முதல் துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, 17 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியிடத்துக்கு, ஐந்து நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 172 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 125 வேட்பாளர்களும், 322 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, 411 வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.
அதுபோல், 2,595 வார்டு உறுப்பினர் பதவிக்கு, 2,314 வேட்பாளர்களும், 5 நகராட்சிகளின் சேர்மன் பதவிக்கு, 10 வேட்பாளர்களும், 153 நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு, 52 வேட்பாளர்கள், 19 டவுன் பஞ்சாயத்து சேர்மன் பதவிகளுக்கு, 22 பேர், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு, 189 வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, மாவட்டத்தில் உள்ள, 3,577 உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்றுவரை, 3,128 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.