/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி சட்டசபையில் காங்., வெளிநடப்புபுதுச்சேரி சட்டசபையில் காங்., வெளிநடப்பு
புதுச்சேரி சட்டசபையில் காங்., வெளிநடப்பு
புதுச்சேரி சட்டசபையில் காங்., வெளிநடப்பு
புதுச்சேரி சட்டசபையில் காங்., வெளிநடப்பு
ADDED : செப் 15, 2011 04:09 AM
புதுச்சேரி:ராஜிவ் கொலை வழக்கு தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற
தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாததால், புதுச்சேரி சட்டசபையில் இருந்து காங்.,
எம்.எல்.ஏ.,க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் நேற்று கேள்வி
நேரம் முடிந்து ஜீரோ நேரம் துவங்கியவுடன், எதிர்கட்சித் தலைவர்
வைத்திலிங்கம் எழுந்து, 'ராஜிவ் கொலை வழக்கில் கோர்ட் அளித்த தீர்ப்பை
நிறைவேற்ற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என,
கேட்டார். இதே கருத்தை வலியுறுத்தி காங்., எம்.எல்.ஏ.,க்கள் பேசினர்.
'ஜீரோ
நேரத்தில் சபாநாயகர் அழைக்காமல் எதிர்கட்சித் தலைவர் பேசியது எப்படி... '
என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். சட்டசபை அ.தி.மு.க., தலைவர் அன்பழகன் பேசும்போது, 'மூன்று
தமிழர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு ஜனாதிபதியை
வற்புறுத்தி தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என்று கேட்டார். இதையடுத்து
அ.தி.மு.க.,- காங்., எம்.எல்.ஏ.,க்கள் இடையில் கடும் வாக்குவாதம்
ஏற்பட்டது. இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபையில் அமைதியை
கொண்டு வர முயன்ற சபாநாயகர் சபாபதி, மணியை பலமுறை ஒலித்தும் அமைதி
திரும்பவில்லை. தங்களது தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று காங்.,
எம்.எல்.ஏ.,க்களும், தங்களது தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் மாறி மாறி வலியுறுத்தினர்.' கோர்ட்டில்
உள்ள விஷயம் தொடர்பாக இந்த சபையில் பேசுவது மரபாக இருக்காது. எனவே,
இதுதொடர்பாக எந்த தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது' என, சபாநாயகர்
சபாபதி தெரிவித்தார். தங்களது தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாததை கண்டித்து
காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


