பா.ஜக. .எம்.எல்.ஏ. காங். கட்சிக்கு தாவினார்
பா.ஜக. .எம்.எல்.ஏ. காங். கட்சிக்கு தாவினார்
பா.ஜக. .எம்.எல்.ஏ. காங். கட்சிக்கு தாவினார்
ADDED : செப் 13, 2011 09:19 AM
பானாஜி: கோவா மாநிலத்தில் பா.ஜ.
எம்.எல்.ஏ. ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கோவா மாநிலத்தில் முதல்வர் திகம்பர் காமத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில கோவா மாநிலத்தின் பிக்கோலிம் சட்டமன்ற தொகுதியிலிருந்து பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேஷ்பட்னாகர் என்பவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தினை கவர்னர் பிரதாப்சிங் ரானேயிடம் அளித்தார். கோவா மாநிலத்தி்ற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி ராஜேஷ் பட்னாகர் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளார். இதன் மூலம் கோவா மாநிலத்தில் பா.ஜ.எம்.எல்.ஏ.க்களின் பலம் 14-லிருந்து 13 ஆக குறைந்துள்ளது.