/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பசிலிக்கா சிறப்பு மலர் வெளியீடுதூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பசிலிக்கா சிறப்பு மலர் வெளியீடு
தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பசிலிக்கா சிறப்பு மலர் வெளியீடு
தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பசிலிக்கா சிறப்பு மலர் வெளியீடு
தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பசிலிக்கா சிறப்பு மலர் வெளியீடு
ADDED : செப் 06, 2011 12:58 AM
புதுச்சேரி: புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பசிலிக்கா சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடந்தது.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயம் 'பசிலிக்கா' (பேராலயம்)வாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த சிறப்பு மலர் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. தாமஸ் அடிகளார் வரவேற்றார். பிரான்சிஸ் ராஜ் நினைவுப் பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் இக்பால்சிங், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பிரெஞ்ச் மற்றும் தமிழ் மொழிகளில் உள்ள பசிலிக்கா ஆவணப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தனர். பேரவை நிர்வாக உறுப்பினர் லூர்துசாமி வாழ்த்துரை வழங்கினார். கவர்னர் இக்பால் சிங் விழா சிறப்பு மலரை வெளியிட, முதல்வர் ரங்கசாமி பெற்றுக் கொண்டார். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது, தூய இருதய ஆண்டவர் ஆலயம் பசிலிக்காவாக தரம் உயர்த்தப்பட்டது, எங்கள் ஆட்சிக்காலத்தில் நடந்ததால் எங்களுக்கும், மாநிலத்திற்கும் பெருமையான ஒன்றாக உள்ளது. நம்பிக்கையுடன் ஆண்டவரை வேண்டினால் எதுவும் கிடைக்கும். நூற்றாண்டு புகழ் வாய்ந்த கட்டடத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். எனது அரசு சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார். பொறியாளர் சார்லஸ் கோலான் நன்றி கூறினார்.