
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி: முதல்வர் நரேந்திர மோடியிடம் ஆலோசிக்காமலே லோக் ஆயுக்தாவை குஜராத் கவர்னர் நியமித்துள்ளார்.
டவுட் தனபாலு: உங்களை மாதிரி மூத்த அரசியல்வாதிகள் எல்லாம் இப்படிச் சொல்லலாமா...? இப்படி, முன்னுதாரணமே இல்லைங்கிற பழிச்சொல் வந்துடக் கூடாதுன்னு தானே, ஏற்கனவே கர்நாடகாவில் பரத்வாஜை கவர்னரா நியமிச்சு, எடியூரப்பா கண்ல விரல் விட்டு ஆட்டினோம்... அப்போ, எடி... இப்போ மோடி...! முன்னுதாரணம் இருக்கா,
பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி: லோக்பாலை அரசியல் சட்ட அமைப்பாக்குவது பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது, மக்கள் விருப்பப்படி, கடுமையான லோக்பாலை விரைவாக அமைக்கும் நடவடிக்கைக்குத் தான்
டவுட் தனபாலு: லோக்பால் பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு...? உங்க மேல இதுவரை ஒரு ஊழல் வழக்காவது இருக்கா...? வரலாறு காணாத முறைகேடு ஏதாவது பண்ணியிருக்கீங்களா...? அப்புறம் என்ன தகுதியில நீங்க அதைப் பத்தி பேசறீங்க...?
பா.ஜ., மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்: நாட்டில் விவசாயிகளின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களின் பிரச்னையை கவனமுடன் அணுகவில்லை என்றால், ஒவ்வொரு இந்தியனும் சாப்பாட்டுக்கே அல்லாட வேண்டியிருக்கும்.
டவுட் தனபாலு: நீங்க வேற... நாட்டுலயே அரசியல்வாதிகளின் நேரடித் தலையீடு இல்லாம, அது ஒண்ணு தான் உருப்படியா நடந்துட்டு இருக்கு... இதுவரைக்கும், விவசாயம் பண்ணி, நஷ்டமடைஞ்ச விவசாயிகள் தான் தற்கொலை பண்ணியிருக்காங்க... அவங்க பார்வை பட்டா, விவசாயம் பண்ணாமலே விவசாயிகள் தற்கொலை பண்ணிக்க வேண்டியது தான்...!