ADDED : ஆக 29, 2011 10:56 PM
புதுச்சேரி : சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு முதலியார்பேட்டையில் இலவச மாதிரி நுழைவுத் தேர்வு நடந்தது.
முதலியார்பேட்டை விவேகானந்தா கோச்சிங் சென்டர் மற்றும் மிராக்கள் சமுதாயக் கல்லூரி சார்பாக சர்வதேச எழுத்தறிவு மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான இலவச மாதிரி நுழைவுத் தேர்வு நேற்றுமுன்தினம் காலை நடந்தது. கோச்சிங் சென்டரில் நடந்த இலவச நுழைவுத் தேர்வை வி.சி.சி.நாகராஜன் துவக்கி வைத்தார். மிராக்கள் கல்வி குழுமத் தலைவர் போன்ஸ் ரமேஷ் முன்னிலை வகித்தார். தேர்வில் 8ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பயிலும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.