கார் கிணற்றில் விழுந்து 3 பேர் பலி
கார் கிணற்றில் விழுந்து 3 பேர் பலி
கார் கிணற்றில் விழுந்து 3 பேர் பலி
ADDED : ஆக 07, 2011 12:31 PM
கோவை : கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள கரடிமலை பகுதியில் கார் ஒன்று கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் அக்கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை பின்நோக்கி எடுத்த போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. கடைக்கு செல்வதற்காக காரில் இருந்த 2 குழந்தைகள், மாமியார், மருமகள், டிரைவர் ஆகியோர் நீரில் மூழ்கினர். குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரைவர், மாமியார். மருமகள் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


