ஆசியாவின் நீண்ட தந்தம் உள்ள யானை இறந்தது
ஆசியாவின் நீண்ட தந்தம் உள்ள யானை இறந்தது
ஆசியாவின் நீண்ட தந்தம் உள்ள யானை இறந்தது
ADDED : ஆக 07, 2011 04:49 AM

கொழும்பு: ஆசியாவின் மிகவும் நீளமான தந்தம் கொண்ட யானை மிலிங்கோடா ராஜா 70, நேற்று உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இலங்கையில் இறந்தது.
இறந்த இந்த யானைக்கு கண்டி நகரில் புத்த தேவாயத்தினர் இறுதி சடங்குகள் செய்தனர். இலங்கையி்ன் கண்டி நகரில் பெராஹிரா பகுதியில் அபுஹாமி மிலிங்கோடா என்பவர் வளர்த்துவரும் யானை ஒன்று ஆசிய கண்டத்திலேயே மிகவும் நீண்ட தந்தம் கொண்டயானை என கூறப்படுகிறது. மிலிங்கோடா ராஜா என்ற பெயருள்ள 70 வயது யானை கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பல்வேறு திருவிழாக்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்து வந்தது. இந்த யானையி்ன் இரு தந்தங்களும் சுமார் 5.05 அடி நீளம் கொண்டவை. ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் இது போன்ற நீண்ட தந்தம் உள்ள யானைகள் இதுவரை இல்லை என கூறப்படுகிறது. மிலிங்கோடா ராஜா கடந்த 18 மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சை பலனின்றி கடந்த 3-ம் தேதி இறந்ததாக பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி நரில் உள்ள ஒரு புத்தமடத்தில் , மடத்தின் தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் யானைக்கு இறுதிசடங்குகள் நடத்தினர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது குறித்து யானையினை வளர்த்து வந்த அபுஹாமி மிலிங்கோடா கூறுகையில், இலங்கையில் வடமேற்கு பகுதியில் கடந்த 1945-ம் ஆண்டு வனப்பகுதியில் இந்த யானை பிடிக்கப்பட்டு வளர்த்து வந்தோம். குடும்பத்தில் ஒருவராக இருந்தது மறைந்துவிட்டதேஎன கண்ணீருடன் தெரிவித்தார்.