ரூ.10 ஆயிரம் கோடியில் 1.72 லட்சம் குடியிருப்புகள் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் திட்டம்
ரூ.10 ஆயிரம் கோடியில் 1.72 லட்சம் குடியிருப்புகள் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் திட்டம்
ரூ.10 ஆயிரம் கோடியில் 1.72 லட்சம் குடியிருப்புகள் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் திட்டம்
ADDED : ஆக 05, 2011 02:39 AM
சென்னை : குடிசைப் பகுதிகளற்ற திட்டத்தை, ராஜிவ் வீட்டுவசதித் திட்டமாக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின், 50 விழுக்காடு உதவித் தொகையுடன், மாநில அரசின் 50 விழுக்காட்டையும் சேர்த்து, ராஜிவ் வீட்டுவசதித் திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது, 742 கோடியே 64 லட்ச ரூபாய் செலவில், 6,364 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அதன் நிதியைப் பயன்படுத்தியும், தனியார் கூட்டு முயற்சியிலும், புதிய குடியிருப்புகளைக் கட்டித் தரும். நடப்பாண்டில், வீட்டுவசதி வாரியம் மூலம், 340 கோடி ரூபாய் செலவில், 2,427 குடியிருப்புகளைக் கட்டித் தர உள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ், 10 ஆயிரத்து 768 கோடி ரூபாய் செலவில், ஒரு லட்சத்து 72 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. நடப்பாண்டில், 400 கோடி ரூபாய் செலவில், 8,733 குடியிருப்புகள் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும். நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் மூலம், 1,939 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில், 44 ஆயிரத்து 870 குடியிருப்புகள் கட்ட, நடவடிக்கை எடுக்கப்படும்.