ADDED : ஜூலை 25, 2011 12:04 AM
புதுச்சேரி : புதுச்சேரி என்.சி.சி., விமானப்படை பிரிவு நடத் தும் ஆண்டு பயிற்சி முகாம், லாஸ்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த 21ம் தேதி துவங்கியது.
வரும் 30ம் தேதி வரை நடக்கும் இம்முகாமில் புதுச்சேரி, கடலூர் மாவட் டத்தைச் சேர்ந்த 405 என்.சி.சி., மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
முகாம் கமாண்டன்ட் விங் கமாண்டர் விஷால் துக்னைட் முகாமைத் துவக்கி வைத்தார். இதில் மாணவர்களுக்கு தினமும் உடற் பயிற்சி, யோகா, துப்பாக்கி சுடுதல், ஏரோமாடலிங் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு கைப்பந்து, கூடைப் பந்து, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. மாணவர்களின் தனித்தன்மையை வெளிக்கொணரும் வகையில், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. தீயணைப்பு, போக்கு வரத்து துறை உயர் அதிகாரிகளும், பிப்டிக் அதிகாரிகளும் சிறப்புரையாற்ற உள் ளனர். இங்கு, குடியரசு தின விழாவிற்கு, மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.