திருமலையில் ரூ.இரண்டரை லட்சம் திருட்டு
திருமலையில் ரூ.இரண்டரை லட்சம் திருட்டு
திருமலையில் ரூ.இரண்டரை லட்சம் திருட்டு
ADDED : ஜூலை 24, 2011 04:35 AM
நகரி : சென்னையில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சந்திரமோகன் குடும்பத்தினர், 21ம் தேதி இரவு திருமலைக்கு வந்து, 14ம் எண் கொண்ட ஸ்பெஷல் தங்கும் விடுதியில் தங்கினர்.
அங்கு தாங்கள் கொண்டு வந்திருந்த பைகள், சூட்கேஸ்களை வைத்துவிட்டு உணவு சாப்பிட ஓட்டலுக்கு சென்றனர்.
திரும்பி வந்து பார்த்தபோது, விடுதி கதவுகள் திறக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் வெங்கடேச பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்த கொண்டு வந்த இரண்டரை லட்ச ரூபாய் வைத்திருந்த சூட்கேஸ் திருடு போனது தெரிய வந்தது. திருமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.