Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வன விலங்குகள் வேட்டை 200 பேர் சிக்கினர்

வன விலங்குகள் வேட்டை 200 பேர் சிக்கினர்

வன விலங்குகள் வேட்டை 200 பேர் சிக்கினர்

வன விலங்குகள் வேட்டை 200 பேர் சிக்கினர்

ADDED : ஜூலை 24, 2011 02:25 AM


Google News

திருப்பூர் : தாராபுரம் பகுதியில் உள்ள கிராமங்களில் வன விலங்கு களை வேட்டையாடிய 200 பேரை வனத்துறையினர் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

அவர்களிடமிருந்து முயல், உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.தாராபுரம் அருகில் சங்கரண்டாம்பாளையம், மறவப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆண்டு தோறும் ஆடி வேட்டை திருவிழா நடப்பது வழக்கம்; ஆடி மாதம் 3ம் தேதி துவங்கி, நான்கு நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதி யில் இருந்து ஒரு குறிப்பிட்ட பிரிவு சார்ந்த ஆண்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்பர்.ஆடி மாத திருவிழா நேற்று முன்தினம், ஆடி வெள்ளியன்று துவங்கியது; 200க்கும் மேற்பட்டோர் சங்கரண்டாம்பாளையம், மரவப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள முட்காடுகள் மற்றும் பட்டா நிலங்களில் கம்பு, அரிவாள் உ ள்ளிட்ட ஆயுதங்களுடனும், நாய்களுடன் வன விலங்கு வேட்டைக்கு குவிந்தனர்.



தகவலறிந்த காங்கயம் வனச்சரக அலுவலர் பன்னீர் செல்வம் மற்றும் 20 பேர் அடங்கிய வனத்துறையினர் அக்கிராமங்களுக்கு சென்று கண்காணித்தனர். அப்பகுதியில் முயல், உடும்பு, முள்ளம்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாட அப்பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 200 பேரை பிடித்தனர். அவர்களிடம் வனத்துறையினர், 'வனப்பகுதி மட்டுமின்றி, தனியார் நிலங்களிலும் வன விலங்குகளை வேட்டையாட கூடாது ' என எச்சரித்து அனுப்பினர்.வனச்சரகர் பன்னீர் செல்வம் கூறுகையில், ''ஆண்டுதோறும் வேட்டை திருவிழா என்ற பெயரில் முன்னோர்கள் செய்ததாக கூறி குறிப்பிட்ட நாளில் விலங்குகளை வேட்டையாடுகின்றனர். வேட்டையாட வந்தவர்களை எச்சரித்து அனுப்பப்பட்டனர்; முயல்களை வேட்டையாடிய மூலனூர், சாணார்பாளையம், பெரமியம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், சதீஷ், சரவணன், கருணாநிதி உள்ளிட்ட 5 பேருக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்த 5 முயல்களும் கைப்பற்றப்பட்டது, என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us