Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஏரியில் மீன் பிடிப்பதை தடுக்க கலெக்டரிடம் மனு

ஏரியில் மீன் பிடிப்பதை தடுக்க கலெக்டரிடம் மனு

ஏரியில் மீன் பிடிப்பதை தடுக்க கலெக்டரிடம் மனு

ஏரியில் மீன் பிடிப்பதை தடுக்க கலெக்டரிடம் மனு

ADDED : ஜூலை 13, 2011 11:57 PM


Google News
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் ஏரியில் குத்தகை காலம் முடிந்த பிறகும், சட்ட விரோதமாக மீன் பிடித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மகேஸ்வரனிடம் பண்ணந்தூரை சேர்ந்த வேடியப்பன் மற்றும் சிலர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. 27 ஹெக்டேர் பரப்புள்ள இந்த ஏரியில் மீன் பிடிப்பதற்காக வருவாய் துறையினர் அரசு கெஜட்டில் அறிவிப்பு செய்து, ஏலம் நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பண்ணந்தூரை சேர்ந்த கட்டப்பஞ்சாயத்தார் அரசு ஏலத்துக்கு முன்பாகவே, ஏலம் விட்டு பொதுப்பணத்தை அவர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். இது குறித்து வருவாய் துறையினருக்கு புகார் அளித்தும் போச்சம்பள்ளி தாசில்தார் விசாரணை மேற்கொள்ளாமல், கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மீன் பிடிப்பதற்கான குத்தகை ஏலத்தை நடத்தியுள்ளார். ஏலம் குறித்து நில நிர்வாகத்துறையில் புகார் செய்யப்பட்டு விசாரணை முடியும் வரை குத்தகைக்கு உறுதிப்படுத்தும் ஆணை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கட்டப்பஞ்சாயத்தார் உறுதிபடுத்தும் ஆணை இல்லாமல், கடந்த ஜூன் 11ம் தேதி முதல் சட்டவிரோதமாக மீன் பிடித்து வருகின்றனர். கடந்த மாதம் 30ம் தேதியோடு மீன் பிடிப்பதற்கான குத்தகை காலம் முடிந்துவிட்டது. தற்போது, ஏரி அரசு வசமான பின்பும் கட்டபஞ்சாயத்தார் நாள் தோறும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்களை பிடித்து விற்பனை செய்கின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். பண்ணந்தூர் ஏரியில் மீன் பிடிப்பது சம்மந்தமாக இரு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us