/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பாதியில் நின்ற பஸ்சால் கடுப்பான மாணவர்கள் திடீர் சாலை மறியல்பாதியில் நின்ற பஸ்சால் கடுப்பான மாணவர்கள் திடீர் சாலை மறியல்
பாதியில் நின்ற பஸ்சால் கடுப்பான மாணவர்கள் திடீர் சாலை மறியல்
பாதியில் நின்ற பஸ்சால் கடுப்பான மாணவர்கள் திடீர் சாலை மறியல்
பாதியில் நின்ற பஸ்சால் கடுப்பான மாணவர்கள் திடீர் சாலை மறியல்
ADDED : ஜூலை 13, 2011 01:44 AM
கூடலூர் : ஸ்ரீ மதுரை - கூடலூர் வழித்தடத்தில் 150 பயணிகளுக்கும் மேல்
இயக்கப்பட்ட அரசு பஸ் பாதியில் நின்றதை கண்டித்து, மண்வயல் சாலையில்
மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கூடலூர் ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சி பகுதி
மாணவர்கள் கூடலூரிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல காலை 7.45 மணிக்கு
இயக்கப்படும் பஸ்சை நம்பியுள்ளனர். பஸ் குறித்த நேரத்தில் இயக்கப்படாததை
கண்டித்து கடந்த 7ம் தேதி மாணவர்கள் கூடலூர் - மமண்வயல் சாலை குங்கூர்மூலா
பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து
போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், நேற்று காலை 150 க்கும் மேற்பட்ட
பயணிகளுடன் சென்ற ஸ்ரீமதுரை - கூடலூர் பஸ் கம்மாத்தி அருகே மேடான சாலையில்
ஏற முடியாமல் நின்று விட்டது. ஆத்திரமடைந்த மாணவர்கள் அங்கேயே சாலை
மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களுக்கு
ஆதரவாக பெற்றோர்களும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர்
இன்ஸ்பெக்டர் தங்கவேல், போக்குவரத்து கழக கிளை மேலாளர் குருதாசலம் மற்றும்
போலீசார் மாணவர்களை சமதானப்படுத்தினர். 'மாணவர்களின் தேவையை கருத்தில்
கொண்டு, மண்வயல் - கூடலூருக்கு இடையே காலையில் கூடுதலாக ஒரு பஸ் இயக்க
நடவடிக்கை எடுக்கப்படும்,' என கிளை மேலாளர் குருதாசலம் உறுதியளித்ததை
தொடர்ந்து, காலை 9.45 மணிக்கு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.