/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குனியமுத்தூரிலும் குடிநீர்ப் பிரச்னைகுனியமுத்தூரிலும் குடிநீர்ப் பிரச்னை
குனியமுத்தூரிலும் குடிநீர்ப் பிரச்னை
குனியமுத்தூரிலும் குடிநீர்ப் பிரச்னை
குனியமுத்தூரிலும் குடிநீர்ப் பிரச்னை
ADDED : ஆக 05, 2011 01:33 AM
குறிச்சி : குனியமுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 15 நாட்களுக்கு
ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்வதால், பொதுமக்கள்
அவதிப்படுகின்றனர்.குனியமுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும்,
சிறுவாணி மற்றும் ஆழியாறு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
துவக்
கத்தில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை, வினியோ கிக்கப்பட்ட குடிநீர், தற்போது 15
நாட்களுக்கு ஒருமுறைதான் வினியோகம் செய்யப்படுகிறது.நகராட்சிக்குட்பட்ட
பகுதியில் வசிப்போர் கூறுகையில், 'சிறுவாணி குடிநீருடன் தற்போது ஆழியாறு
குடிநீரும் வினியோகிக்கின்றனர். இக்குடிநீர், பொள்ளாச்சி பகுதியில்
சுவையுடன் உள்ளது; இங்கு சப்பை தண்ணீர்போல் உள்ளது. இது குறித்து
விசாரித்தபோது, இக்குடிநீருடன், ஆழ்குழாய் கிணற்று நீரை கலந்து, வினியோகம்
செய்வது தெரிந்தது' என்றனர்.