Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாடு : மின் மோட்டாரை பறிக்க குழு

சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாடு : மின் மோட்டாரை பறிக்க குழு

சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாடு : மின் மோட்டாரை பறிக்க குழு

சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாடு : மின் மோட்டாரை பறிக்க குழு

ADDED : செப் 08, 2011 10:39 PM


Google News

சிவகாசி : சிவகாசியில் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்க, நகராட்சி நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் , இணைப்பு நீரை மின் மோட்டாரில் எடுப்பதை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிவகாசி நகராட்சிக்கு தினம் 60 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 35 லட்சம், வெம்பக்கோட்டை அணையிலிருந்து 25 லட்சம் லிட்டர் பெறப்பட்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படுகிறது. வெம்பக்கோட்டை அணை 2 ஆண்டுகளாக வறண்டுள்ளது. இதனால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது. அணை உள் பகுதியில் 3 உறைகிணறுகள் அமைத்து , தினம் 10 லட்சம் லிட்டர் குறையாமல் பெறப்பட்டது. வறட்சியால் உறைகிணறு நீர் மட்டமும் குறைந்து ,தினம் 5 லட்சம் லிட்டர் நீரே கிடைக்கிறது. மனூர் குடிநீர் திட்டத்திலும் 30 லட்சம் லிட்டர் நீர்தான் பெறமுடிகிறது. இதனால் நகராட்சியின் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால் வாரம் ஒருமுறை வினியோகிக்கப்படுகிறது. அணைக்குள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து,இக் கிணற்றிலிருந்து டேங்கர் லாரிகளில் குடிநீர் ஏற்றி, வெம்பக்கோட்டை அணை தரைமட்ட தொட்டியில் சேர்க்கப்படுகிறது. அங்கிருந்து பம்பு செய்து சிவகாசிக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மின் கண்காணிப்பாளர் தேவசத்தியராஜன் தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக் குழுவினர் மின்மோட்டாரை பறிமுதல் செய்ய உள்ளனர். '' குடிநீர் விநியோகத்தில் 25 சதவீத நீர் குழாய் உடைப்புகளால் வீணாகிறது. இதை சரிசெய்யும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கையால் மூன்று மாதங்களுக்குள் குடிநீர் தட்டுப்பாடு சமாளிக்கபடும்,'' என, நகராட்சி பொறியாளர் முருகன் தெரிவித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us