Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரூ. 5 கோடி லஞ்சம் கேட்டு மிரட்டல்: அமைச்சர் மீது புகார்

ரூ. 5 கோடி லஞ்சம் கேட்டு மிரட்டல்: அமைச்சர் மீது புகார்

ரூ. 5 கோடி லஞ்சம் கேட்டு மிரட்டல்: அமைச்சர் மீது புகார்

ரூ. 5 கோடி லஞ்சம் கேட்டு மிரட்டல்: அமைச்சர் மீது புகார்

ADDED : ஆக 08, 2011 03:47 AM


Google News
ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்கள் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் சாலைப்பணிகள் மேற்கொள்ள காண்டிராக்ட் எடுத்திருந்த கனடா தொழிலதிபரிடம், 1 மில்லியன் ரூ.

5 கோடி கமிஷன் கேட்டு மிரட்டியதாக வந்த புகாரின் பேரில் அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் மீது விசாரணை நடத்த முதல்வர் ராமன்சிங் உத்தரவிட்டுள்ளார். கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மிர் அலி (42) , சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவேயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை -221 பிரிவில் 78 கி.மீ.தொலைவிற்கு சாலை மேம்பாட்டு பணிகளுக்காக 44 மில்லியன் டாலர் (197 கோடி )காண்ட்டிராக்ட் எடுத்திருந்தார். 3 0 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும், ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் பிர்ஜ்மோகன் அகர்வால் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி காண்டிராக்ட் பெற்ற கனடா தொழில் அதிபர் மி்ர்அலியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் அப்போது மிர்அலியை, அமைச்சர் பிர்ஜ்மோகன் அகர்வால், தனக்கு கமிஷனாக ரூ.5 கோடி கேட்டு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்தார். இது குறித்து சட்டீஸ்கர் மாநில முதன்மை செயலர் பஜேந்திரகுமார் உறுதி செய்தார். முதல்வர் ராமன்சிங் இது குறித்து விசாரணை நடத்தி உத்தரவிட்டார். மேலும் பொதுப்பணித்துறை அமைச்சர் கமிஷன் தொகையை லஞ்சமாக கேட்ட விவகாரம் கனடா பத்திரிகைகளிலும் வெளியாகி பரபப்பினை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் முதன்மு‌தலாக அமைச்சர் ஒருவர் டாலர் கரன்சியை லஞ்சமாக கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுப்பணித்துறை அமைச்சர் லஞ்சம் கேட்டது மாநிலத்திற்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானம் என முன்னாள் முதல்வர் அஜித் ஜோஹி கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us