/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சி வக்கீல்கள்கோர்ட் புறக்கணிப்புசெஞ்சி வக்கீல்கள்கோர்ட் புறக்கணிப்பு
செஞ்சி வக்கீல்கள்கோர்ட் புறக்கணிப்பு
செஞ்சி வக்கீல்கள்கோர்ட் புறக்கணிப்பு
செஞ்சி வக்கீல்கள்கோர்ட் புறக்கணிப்பு
ADDED : ஜூலை 16, 2011 02:32 AM
செஞ்சி:இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை கண்டித்து செஞ்சியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.
செஞ்சி பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன் அவசர கூட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர்கள் சுப்ரமணியன், விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல்கள் பாலன், சுப்பிரமணியன், பிரவீன், ராஜேந்திரன், கமலக்கண்ணன், எவான்ஸ், சீனுவாசன் கலந்து கொண்டனர்.இதில் இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். இதனையடுத்து செஞ்சியில் வக்கீல்கள் நேற்று அனைத்து கோர்ட்டுகளையும் புறக்கணித்தனர்.