ADDED : ஆக 17, 2011 12:02 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை தஞ்சாவூர் பள்ளி
வாசல் தெருவை சேர்ந்தவர் ஹபிபுல்லா(52).
வாடகை கார் ஓட்டுனரான இவரிடம்
செங்கோட்டையில் இருந்து மூன்று பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோயில்
செல்ல வேண்டும் எனக்கூறி வாடகை பேசி டாடா இண்டிகா காரில் ஏறியுள்ளனர்.
கிருஷ்ணன்கோவிலிலிருந்து லட்சுமியாபுரம் -மங்களம் ரோட்டில் செல்லுமாறி
கூறியுள்ளனர். அங்கு செல்லும் போது திடீரென காரில் வந்தவர்கள் டிரைவரை
அரிவாளால் வெட்டி கிழே தள்ளி விட்டு இண்டிகா காரை எடுத்து சென்று விட்டனர்.
அவர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வருகிறார். நத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.