Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ராணுவ நிதியுதவியை நிறுத்தியதன் எதிரொலி : ஐ.எஸ்.ஐ., தலைவர் அமெரிக்கா பயணம்

ராணுவ நிதியுதவியை நிறுத்தியதன் எதிரொலி : ஐ.எஸ்.ஐ., தலைவர் அமெரிக்கா பயணம்

ராணுவ நிதியுதவியை நிறுத்தியதன் எதிரொலி : ஐ.எஸ்.ஐ., தலைவர் அமெரிக்கா பயணம்

ராணுவ நிதியுதவியை நிறுத்தியதன் எதிரொலி : ஐ.எஸ்.ஐ., தலைவர் அமெரிக்கா பயணம்

ADDED : ஜூலை 13, 2011 11:56 PM


Google News

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கான, ராணுவ நிதியுதவியை அமெரிக்கா குறைத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில், விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் தலைவர் அகமத் சுஜா பாஷா நேற்று திடீரென அமெரிக்கா சென்றுள்ளார்.

இதுகுறித்து பாக்., ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புலனாய்வு விஷயங்களில், அமெரிக்கா உடனான ஒத்துழைப்பு மேம்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக, உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் தலைவர் அகமத் சுஜா பாஷா, ஒரு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், இருநாட்டு உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிக்கட்டும் விதமாக, அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவே, சுஜா பாஷா சென்றுள்ளார் என, பாக்., அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்கா ராணுவம் நிதியுதவி வழங்கி வருகிறது. அதில் மூன்றில் ஒரு பங்கை, அதாவது, 3 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை, அமெரிக்கா சமீபத்தில் நிறுத்தியது. எரிச்சல் அடைந்த பாகிஸ்தான், ஆப்கன் எல்லையில் உள்ள தங்கள் வீரர்களை, பாதுகாப்பு பணியிலிருந்து வாபஸ் பெறப்போவதாக மிரட்டியுள்ளது. அப்படி பாதுகாப்பு வாபஸ் பெறப்படுமானால், ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து, ஆப்கனுக்கும் தலிபான்கள் உள்ளிட்ட பயங்கவரவாதிகளின் நடமாட்டம் சர்வசாதாரணமாக நடக்கும்.

இதைக் கருத்தில் கொண்டே, இருதரப்பு உறவை பலப்படுத்தும் வகையில், அமெரிக்க ராணுவ மைய தலைமை கமாண்டர் ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ், பாகிஸ்தானுக்கு நேற்று முன்தினம் வந்தார். அதைத் தொடர்ந்து, பாக்., ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமத் சுஜா பாஷா அமெரிக்கா சென்றுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us